அவர் உயிருக்கு ஆபத்து உள்ளது - எங்கே வைத்திருக்கிறார்கள்? பெலிக்ஸ் மனைவி குற்றச்சாட்டு
Red Pix பெலிக்ஸ் ஜெரால்டின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரின் மனைவி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Red Pix பெலிக்ஸ்
பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கடந்த 4-ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டு தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது அடுத்தடுத்த பல புகார்கள் வரும் நிலையில், அவர் மீது குண்டாஸ் சட்டம் அண்மையில் போடப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் கைதை அடுத்து காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் Red Pix சேனலின் எடிட்டரான பெலிக்ஸ் ஜெரால்டும் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தமிழக காவல்துறையால் டெல்லியில் அவரையும் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 10-ஆம் தேதி இரவு 11:20 மணியளவில் அவருக்கு மூலம் பலமுறை அழைத்தபோதும் அவர் போனை எடுக்கவில்லை என குறிப்பிட்டு, ஒரு முறை மட்டுமே எடுத்து, போலீசார் தன்னை கைது செய்துள்ளதை குறித்து தெரிவித்ததாக கூறினார்.
உயிருக்கு ஆபத்து உள்ளது
அருகில் இருந்து போலீசாரிடம் பெலிக்ஸ் போனை கொடுக்க தான் அவரிடம் எதற்காக எனது கணவரை கைது செய்திருக்கிறீர்கள்? என்றும் எப்போது ஊருக்கு கொண்டு வருவீர்கள்? என்று கேட்டபோது மறுநாள் காலையில் ரயிலில் அவரை திருச்சிக்கு கொண்டு வருவதாக தெரிவித்தனர் என்பதையும் கூறினார்.
ஆனால், மறுநாள் காலை ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்ததாக கூறிய பெலிக்ஸின் மனைவி, அதன் பின் பலமுறை அழைத்து போதிலும் யாரும் போனை எடுத்து பேசவில்லை என கூறினார்.
மேலும், எனது கணவரை எங்கே வைத்திருக்கிறார்கள்?, எங்கே கொண்டு செல்கிறார்கள்?. என்னச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை என வேதனையுடன் குறிப்பிட்ட பெலிக்ஸின் மனைவி, போலீஸாரால் எனது கணவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது குறித்து அவர் புகார் மனு ஒன்றும் அளித்துள்ளார்