இந்த தேதியில் ரெட் அலர்ட்; சென்னை வாசிகளே கவனம் - வானிலை மையம் வார்னிங்!
4 மாவட்டங்களுக்கு அக்.16-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்
அக்.,16 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15 - 16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும்.
வானிலை மையம் எச்சரிக்கை
நாளை மறுநாள் (அக்டோபர் 15), அக்டோபர் 16 ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
(அக்.,18) மற்றும் (அக்.,19) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‛ரெட் அலர்ட்’ விடுக்கப்படும்போது ஏறக்குறைய 20 சென்டிமீட்டரை விட அதிகளவில் மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.