26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவல்
அந்தமானையும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 23ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
இதே போல் இன்று திருப்பூர், நீலகிரி, கோவை, சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல் , பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி, திருவாரூர், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை ,நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் , விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் புதுச்சேரி மாநிலத்தின் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.