கனமழை எச்சரிக்கை.. இந்த 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக இன்று சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை புயலாக வலுபெற உள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல்( fengal ) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதலே சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். டிச., 4 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது.
விடுமுறை
இந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.