YouTube மூலம் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு - NIA விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Youtube Tamil nadu Chennai Crime
By Vidhya Senthil Oct 09, 2024 06:27 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 யூடியூப் மூலம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்கள் திரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

YouTube 

அல்-கொய்தா (AQIS) மற்றும் தெஹரிக்-இ-தலிபான் ஆகிய அமைப்புகளால் இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவில் உள்ள இளைஞர்களை ஆட்சேர்ப்பில் பணிகள் நடைபெற்று வருவதாகத் தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

YouTube

அதனிபடையில் NIAஅதிகாரிகள் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றினர்.

Time Machine..முதியவர்களை இளமையாக்குவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி-நூதன கொள்ளை!

Time Machine..முதியவர்களை இளமையாக்குவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி-நூதன கொள்ளை!

 முன்னதாக கடந்த மே மாதல் யூடியூப் மூலம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்கள் திரட்டியும், ஆட் சேர்ப்பு கூட்டங்களை நடத்தி மூளைச்சலவை செய்தும் இஸ்பு உத் தஹிரீர் என்ற அமைப்பிற்கு ஆட்கள் சேர்ப்பதாக தகவல் வெளியானது .

NIA விசாரணை

இது தொடர்பாகச் சென்னை சைபர் கிரைம் காவல்துறையால் ராயப்பேட்டையைச் சேர்ந்த தந்தை மகன்கள் 3 பேர் உட்பட மொத்தம் 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

NIA

இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி முதல் முறையாக 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது அதே 6 நபர்களை இரண்டாவது முறையாகத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.