3 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் ..விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கனமழை
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அப்போது, 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் அதிகனமழை கொட்டியது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, புதுச்சேரியில் பல முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின.
இந்த நிலையில் சங்கராபரணி ஆற்றில் சிக்கி 11 ஆம் வகுப்பு படித்து வந்த லியோ என்ற மாணவன் மாயமானதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ராணுவத்தினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவன் உடல்
இந்த சுழலில் , செள்ளிப்பட்டு படுகை அணைப்பகுதி அருகே சடலம் ஒன்று கிடைப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அங்குச் சென்று பார்த்தபோது மாணவர் லியோவின் உடல் என்பது தெரியவந்தது .
இதனையடுத்து அவரது உடலை மீட்ட மீட்புப் படையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று மாணவன் சடலமாக மீட்கப்பட்ட அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.