இப்படியும் ஒரு கொடூரம் நடக்குமா? திருமண நிகழ்ச்சி மேடையிலேயே சரிந்த வாலிபர்!

Karnataka Heart Attack Crime Murder
By Vidhya Senthil Dec 17, 2024 05:04 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா 

கர்நாடகா மாநிலம், பகடலபண்டே கிராமத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மாப்பிள்ளையின் தோழராக ஆதர்ஷ் என்ற 23 வயது வாலிபர் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்வில் DJ இசைக்கு ஆதர்ஷ் நடனமாடிக் கொண்டிருந்தார்.

இப்படியும் ஒரு கொடூரம் நடக்குமா? திருமண நிகழ்ச்சி மேடையிலேயே சரிந்த வாலிபர்! | 6 Young Man Dies Of Heart Attack In Karnataka

அப்போது திடீரென ஆதர்ஷ் மயங்கிச் சுருண்டு கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் ஆதர்ஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இளைஞரை அடுத்தடுத்து கடித்த நாய், பூனை.. தடுப்பூசி போட்டாமல் அலட்சியம் - கடைசியில் நேர்ந்த கொடூரம்!

இளைஞரை அடுத்தடுத்து கடித்த நாய், பூனை.. தடுப்பூசி போட்டாமல் அலட்சியம் - கடைசியில் நேர்ந்த கொடூரம்!

திருமண நிகழ்ச்சி

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்துக் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் வாலிபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இப்படியும் ஒரு கொடூரம் நடக்குமா? திருமண நிகழ்ச்சி மேடையிலேயே சரிந்த வாலிபர்! | 6 Young Man Dies Of Heart Attack In Karnataka

திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.