மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்.. ஓரினச்சேர்க்கை வெறி - ஆட்டோ ஒட்டுநர் செய்த கொடூரம்!
மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் பிரேதப் பரிசோதனையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி, கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் முருகன் - பாலசுந்தரி. இவர்களுக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் கருப்பசாமிக்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்துள்ளார். இந்நிலையில் திடீரென சிறுவன் மாயமாகியுள்ளார். எங்குத் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரில் பேரில் 3 நாட்களாகச் சிறுவனைத் தேடி வந்தனர்.அப்போது சிறுவனின் வீட்டின் மாடிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். இதனையடுத்து சிறுவன் கருப்பசாமியில் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை
சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் சிறுவனின் ஆசனவாய் மற்றும் வாய் பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து மாவட்ட எஸ்பி தலைமையில் விசாரணை 30-க்கும் மேற்பட்டோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது . அப்போது சிறுவன் ஓரினச்சேர்க்கைக்குப் பலவந்தமாக உட்படுத்த முயற்சி செய்யப்பட்டு பின்னர் கொலை செய்ததாக பகீர் வாக்குமூலம் அளித்தார்.