விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு!
விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
வெற்றி துரைசாமி
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் கடந்த 4-ம் தேதி தனது உதவியாளர் கோபிநாத்துடன் சிம்லா, லடாக் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
சிம்லா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் அங்கிருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சடலமாகவும், கோபிநாத் காயங்களுடனும் மீட்கப்பட்டார்.
உடல் மீட்பு
இதனையடுத்து மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் விபத்து நடந்த இடத்திலிருந்த ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திலிருந்து அவரது உடலை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் சென்னை கொண்டுவரப்பட உள்ளது.