ஒரே நாடு ஒரே தேர்தல்..! குழு அளித்துள்ள முக்கிய பரிந்துரைகள் என்னென்ன..?
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அளித்துள்ள பரிந்துரைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல்
நாட்டில் வெவ்வேறு சமயங்களில் நடைபெறும் மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு நடத்தியது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி இந்த குழு அமைக்கப்பட்ட நிலையில், நாட்டிலுள்ள கட்சிகள் மக்களிடம் இருந்து இந்த குழு பரிந்துரைகளை கேட்டது. அதனை தொடர்ந்து அக்குழு தயார் செய்த விரிவான அறிக்கையை இன்று நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது.
பரிந்துரைகள் என்னென்ன..?
அக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம் தான் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மக்களவை, மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்திய பிறகு அடுத்த 100 நாட்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என குழு பரிந்துரைத்துள்ளது.
ஆனால், 5 ஆண்டு ஆட்சிக் முடிவதற்குள் அரசு கவிழ்ந்தால், மிஞ்சிய காலத்திற்காக புதிய தேர்தலை நடத்தலாம் என்று இக்குழு பரிந்துரைத்துள்ளது.