இவ்வாறு ஆளுநர் நடப்பது தவறு.. அவரை திரும்ப பெறுவதே ஒரே தீர்வு - அமைச்சர் ரகுபதி!!

M K Stalin Tamil nadu DMK Governor of Tamil Nadu
By Karthick Dec 01, 2023 06:34 AM GMT
Report

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே ஆளுநர் முயற்சிக்கிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு - ஆளுநர் விவகாரம்

தொடர்ந்து தமிழக அரசிற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் முரணான போக்கு நீடித்து வருகின்றது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி காலம் தாழ்த்துகிறார் என்ற குற்றசாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகின்றது தமிழக ஆளும் திமுக அரசு.

recalling-the-governor-is-the-solution-ragupathi

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டார் என்று தகவல் அளித்தார்.

திராவிட மாடல் அல்ல - தந்திர மாடல் அரசு இது..! இபிஸ் கடும் விமர்சனம்!!

திராவிட மாடல் அல்ல - தந்திர மாடல் அரசு இது..! இபிஸ் கடும் விமர்சனம்!!

ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டு அவரின் ஒப்புதலுக்காக அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநர் ரவி மறுத்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், 2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்றார்.

recalling-the-governor-is-the-solution-ragupathi

2-வது முறையாக அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியுள்ளது தவறு என சுட்டிக்காட்டிய அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிர்வாகம் முடக்கியிருப்பதாகவும்,இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்பப் பெறுவதுதான் என்றும் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.