தாய்லாந்தில் ஏன் முதலை இறைச்சி அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது? காரணம் இதுதான்!
முதலை இறைச்சி அதிகம் விரும்பி உண்ணப்படும் காரணம் குறித்து காணலாம்.
முதலை இறைச்சி
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்துவமான கலாச்சரம் கொண்டுள்ளது. அதில் ஒரு சில நாடுகள் மிகவும் வினோதமான உணவுக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக தாய்லாந்து மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது. இந்த நாடு அதன் தனித்துவமான உணவு கலாச்சாரத்திற்காகவே பிரபலமானது.
ஏனென்றால் அங்கு சாலைகளில் கூட நீங்கள் காணக்கூடிய ஒரு ஆச்சரியமான உணவு முதலை இறைச்சி. இதனை தாய்லாந்து மக்களும், சுற்றுலா வரும் மக்களும் சாலைகளில் பாகம் பாகமாக இருக்கும் சுவையான முதலை இறைச்சியை மிகுந்த ஆர்வத்துடன் சுவைத்து உண்கிறார்கள்.
இது தாய்லாந்தின் உணவுக் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகிறது. இந்த இறைச்சி பல்வேறு வகையில் பரிமாறப்படுகிறது அதிலும் திறந்த வெளியில் பார்பிக்யூவில் வறுக்கப்படுவதையும் காணலாம், இது சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் கவர்ந்து இழுக்கிறது.
இந்த நிலையில், முதலை வளர்ப்பு என்பது தாய்லாந்தில் மிகவும் பிரபலமான தொழிலாகும். நாடு முழுவதும் பல பண்ணைகளில் 1.2 மில்லியனுக்கும் மேல் முதலைகள் வளர்க்கப்படுகிறது. இவை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு முதலையை வளர்க்கவும், கொல்லவும் அரசாங்க வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படுகின்றன.
உள்ளூர் மக்களிடையே இந்த இறைச்சி ஒரு சுவையான மற்றும் வசீகரமான உணவாக திகழ்கிறது. ஆனால் இங்கு முதலைகள் உணவுக்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை. அவற்றின் தோல் கைப்பைகள் போன்ற ஆடம்பர பொருட்களை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது,
காரணம்..
அதே நேரத்தில் அவற்றின் இரத்தம் மற்றும் பைல் போன்ற பிற பாகங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த நாட்டில் இறைச்சியின் விலை ஒரு கிலோ 570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, இது நம்மூரில் மட்டன் விற்கும் விலையை விட குறைவாகும்.
முதலையின் இரத்தம் ஒரு கிலோவிற்கு சுமார் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, இது பெரும்பாலும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. அதன் பித்தநீர் அளவிலா மருத்துவப் பயன்கள் கொண்ட காரணத்தால் ஒரு கிலோ 76,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த முதலை வளர்ப்பு அங்கு சுமார் 35 ஆண்டுகளாக உள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகுக்கிறது. பெரும்பாலாக தாய்லாந்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த முதலை இறைச்சி உன்பதற்காக வருவதும்கூட சுற்றுலாவை மேம்படுத்த அது உதவுகிறது.
ஆகமொத்தத்தில் தாய்லாந்தில் முதலை வளர்ப்பு மற்றும் இறைச்சி என்பது ஒரு ஆர்வமான விஷயம் என்பதை விட, அவை நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சார நிலப்பரப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.
முதலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் அதன் இறைச்சி தாய்லாந்து சுற்றுலா மற்றும் உணவு வகைகளின் ஒரு தனித்துவமான அம்சமாக இருக்கிறது.