மட்டனுக்கு பதில்.. 3000 கிலோ நாய் இறைச்சி - மிரண்ட வாடிக்கையாளர்கள்!

Bengaluru
By Sumathi Jul 28, 2024 05:19 AM GMT
Report

நாய் கறி விற்றதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாய் கறி 

பெங்களூரில் நாய் இறைச்சியை விற்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பெங்களூரு காவல்துறை இணைந்து கேஎஸ்ஆர் சிட்டி ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

dog meat

அப்போது, நடைமேடை 8 இல் நாய் இறைச்சி இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, 5,000 கிலோ இறைச்சி மற்றும் 150 பெட்டிகளில் சுமார் 1,500 கிலோ இறைச்சி இருப்பது தெரியவந்தது.

சர்க்கரை நோயாளிகள் மட்டன் சாப்பிடலாமா? இதோ முழு விவரம்

சர்க்கரை நோயாளிகள் மட்டன் சாப்பிடலாமா? இதோ முழு விவரம்

வெடித்த சர்ச்சை

அந்த இறைச்சியின் மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். தற்போது, ந்த இறைச்சி எங்கிருந்து வந்தது, அனுப்பியவரிடம் உரிய உரிமம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ள இறைச்சி மாதிரிகளின் முடிவுகள் 14 நாட்களில் கிடைத்துவிடும்.

bengaluru

அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் ஒரு கிலோ மட்டன் சராசரியாக ரூ.750 - 800க்கு விற்பனையாகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களாக சிலர் மட்டன் இறைச்சி ஒரு கிலோ ரூ.550 - 600 என்று விற்பனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.