விமானங்களில் தேங்காய்க்கு அனுமதி இல்லை - இதற்கு இப்படி ஒரு காரணமா?

Flight World
By Swetha Aug 07, 2024 09:00 AM GMT
Report

விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல ஏன் அனுமதி இல்லை என தெரிந்துகொள்லலாம்.

தேங்காய்

விமான பயணத்தில் நாம் கொண்டு செல்லக்கூடிய பொருட்களுக்கு ஒரு சில விதிமுறைகள் இருக்கிறது. அதனை பயணிகள் அவசியம் பின்பற்ற வேண்டும். அதில் விமானத்தில் ஏறும்போது எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாத பல விஷயங்கள் உள்ளன.

விமானங்களில் தேங்காய்க்கு அனுமதி இல்லை - இதற்கு இப்படி ஒரு காரணமா? | Reason For Why Coconut Is Not Allowed In Flight

அதாவது, கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உட்பட பல பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை,அவைகளில் தேங்காயும் ஒன்று. தேங்காய் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தென்னிந்திய உணவில் அதிகளவு பயன்படுத்தப்படுவது தேங்காய். ஏனினும் தேங்காயை கொண்டு செல்ல அனுமதி இலாததற்கு முக்கிய காரணம், அதில் அதிக அளவு எண்ணெய் உள்ளது. அந்த எண்ணெய் எரியக்கூடிய பொருளாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சுகர் இருக்குறவங்க தேங்காய் சாப்பிடலாமா? இந்த மாவெல்லாம் சாப்பிடவே கூடாது!

சுகர் இருக்குறவங்க தேங்காய் சாப்பிடலாமா? இந்த மாவெல்லாம் சாப்பிடவே கூடாது!

 காரணம்

ஆகையால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இந்த நிலையில், விமான நிலைய விதிமுறைகள் அன்மையில் புதுப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விமானங்களில் தேங்காய்க்கு அனுமதி இல்லை - இதற்கு இப்படி ஒரு காரணமா? | Reason For Why Coconut Is Not Allowed In Flight

இதுவரை பயணிகள் தங்கள் கைப்பையில் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இருப்பினும், புதிய விதிமுறைகள் இப்போது சில மருந்துகளை துபாய்க்கு விமானங்களில் எடுத்துச் செல்வதைத் தடை செய்துள்ளன.

இந்த மாற்றங்கள் பயணிகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பேக் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.