இன்ஸ்டாகிராமில் விராட் கோலி என்னை ப்ளாக் செய்ய காரணம் இதுதான் - மேக்ஸ்வெல் விளக்கம்
விராட் கோலி தன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்தது குறித்து மேக்ஸ்வெல் பேசியுள்ளார்.
கிளென் மேக்ஸ்வெல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விராட் கோலி, ஆஸ்திரேலியா வீரர் கிளென் மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட கிளென் மேக்ஸ்வெல் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் தன்னை பிளாக் செய்தது குறித்து பேசியுள்ளார்.
ப்ளாக் செய்த கோலி
நான் ஆர்சிபி அணிக்கு வந்த பின் விராட் கோலியுடன் இணைந்து முகாமில் பயிற்சி செய்தேன். நாங்கள் கலந்து பேசுவதற்கு சிறப்பான நேரங்கள் அமைந்தது. பிறகு நான் அவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்ய தேடும்போது அவரது பெயர் கிடைக்கவில்லை. விராட் கோலி உங்களை பிளாக் செய்திருந்தால் மட்டுமே அவருடைய பெயரை நீங்கள் தேடும் பொழுது காட்டாது என ஒருவர் கூறினார்.
விராட் கோலி என்னை பிளாக் செய்திருப்பார் என நம்ப முடியாமல் இது குறித்து அவரிடமே கேட்டபோது "நீ டெஸ்ட் தொடரில் என்னிடம் கோபமாக நடந்துகொண்டாய். அதனால் நான் உன்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்திருக்கலாம்" என பதிலளித்தார்.
அதன்பின், அவர் மீண்டும் என்னை அன்பிளாக் செய்துவிட்டார். அப்போது முதல் நாங்கள் மீண்டும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் என பேசினார்.