90ஸ் கிட்ஸ் பேவரைட் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுகிறதா?

X TV Program
By Karthikraja Jul 09, 2024 12:36 PM GMT
Report

கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் நெட்வொர்க்

வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தால் 1991 ம் ஆண்டு கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் தொடங்கப்பட்டது. சேனல் துவங்கப்பட்ட குறுகிய காலத்திலே புகழ் பெற்றது. பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்கள் பள்ளிக்கு செல்லும் முன்னரும், பள்ளி சென்று வந்த பின்னரும் வந்து பார்க்கும் அளவுக்கு இந்த சேனல் பிரபலமாக இருந்தது.

cartoon network

இதில் ஒளிபரப்பான டாம் அண்ட் ஜெர்ரி, பெண்10, ஸ்கூப்பி டூ போன்ற நிகழ்ச்சிகளுக்கு உலகளவில் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் இந்த சேனல் மூடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. 

விஜய் கட்சியில் இணைய தயார் - பிரபல நடிகர் அறிவிப்பு

விஜய் கட்சியில் இணைய தயார் - பிரபல நடிகர் அறிவிப்பு

பணி நீக்கங்கள்

எக்ஸ் தளத்தில் #RIPCartoonNetwork என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதை பார்த்தவர்கள் கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா என அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விசாரித்த போது, அனிமேஷன் ஒர்க்கர்ஸ் யுனைடெட் என்ற எக்ஸ் பக்கம் தான் முதலில் இதை துவக்கியுள்ளது. அனிமேஷன் துறையில் கோவிட் காலகட்டத்திற்கு பின்னர் நடக்கும் வெளியே தெரியாத பணி நீக்கங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ட்ரெண்ட் துவக்கப்பட்டது. 

இந்த நிலை தொடர்ந்தால் கார்டூன் அனிமேஷன் பணியாளர்கள் நிலைமை கேள்வி குறியாகி விடும் என்பதனால், இந்த ட்ரெண்ட்-ஐ துவக்கியுள்ளது அனிமேஷன் ஒர்க்கர்ஸ் யுனைடெட். இது குறித்து கார்ட்டூன் நெட்வொர்க் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.