RCB கோப்பை வெல்லாததற்கு காரணம்..? நானே நேரில் பார்த்துள்ளேன் - பிரபல வீரர் பளீச்!
பெங்களூரு அணி கோப்பையை வெல்லாததிற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் பட்டேல் பேசியுள்ளார்.
பெங்களூரு அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை ஒரு கோப்பையை கூட அந்த வென்றதில்லை. பெங்களூரு அணிக்கு ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் கேப்டன்களாக செயல்பட்டுள்ளனர்.
ஆனால், ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததிற்கு பல வல்லுநர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் பட்டேல் கூறுகையில் "நான் பெங்களூரு அணிக்காக 4 ஆண்டுகள் விளையாடியிருக்கிறேன்.
இதுதான் உண்மை
அது எப்போதுமே தனி நபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணியாகும். நான் அதை நேரில் பார்த்திருக்கிறேன். அங்கே அனைவரும் அணியாக இருக்க மாட்டார்கள். அந்த அணியிலிருந்து வெளியே வரும் அனைவருமே இதை சொல்வார்கள்.
ஏனெனில், நான் பெங்களூரு அணியில் இருந்தபோது அங்கே விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் தான் அனைத்துமாகும். அவர்களுக்கு அங்கே ஸ்பெஷல் முன்னுரிமை கொடுக்கப்படும்.
அங்கே அணி கலாச்சாரம் கிடையாது என்பதை அவர்கள் விளையாடுவதை பார்க்கும்போது தெளிவாக தெரியும். அதனாலேயே அவர்கள் கோப்பையை வெல்லவில்லை. இதுதான் உண்மை" என்று தெரிவித்துள்ளார்.

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
