இரண்டரை ஆண்டில் 2வது முறை ரெய்டு - 3 மணி நேரத்திற்கும் மேல்.. அமைச்சரின் பின்புலம் என்ன?
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசு மூலமாக நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை என 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன.
ஐடி ரெய்டு
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மிக நெருக்கமாக உள்ளார். இன்றைய தினத்தை பொறுத்தவரை கோவையில் 5 இடங்களிலும், கரூரில் 4 இடங்களிலும், விழுப்புரத்தில் 3 இடங்களிலும் வருமானவரி சோதனை நடந்து வருகிறது.
இதுமட்டுமின்றி பிரபல கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டரை ஆண்டுகளில் இது 2வது முறை நடைபெறுகிறது.
முந்தைய சோதனைக்கும், தற்போதைய சோதனைக்கு பெரியளவில் வேறுபாடு உள்ளன.
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோரது வரிசையில் அமைச்சர் எ.வ.வேலு சேர்ந்திருப்பது திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.