மும்பை அணியிலேயே அப்படி ஆயிடுச்சு - உஷாரா ஹர்திக் பாண்டியாவை கழட்டி விட்ட பிசிசிஐ
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் சூர்யகுமார் யாதவ்.
இந்திய அணி
அறிவிப்பு டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பிறகு, இளம் இந்திய அணி ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்றது. தற்போது இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான தொடர் மீது பெரும் கவனம் விழுந்துள்ளது.
இந்த தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக தொடருகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், டி20 உலகக்கோப்பையுடன் அவர் ஓய்வு பெற, அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகள் எழுந்தது.
இந்த நிலையில் டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அணியில் வீரராக இடம் பெற்றுள்ளார் ஹர்திக் பாண்டியா. அவருக்கு துணை கேப்டன் பதவியும் வழங்கப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியது.
காரணம்
முன்பு டி20 போட்டிகளில் அணியை வழிநடத்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை விட வீரர்கள் அதீத நம்பிக்கை வைத்திராத காரணத்தினால், அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்கும் முடிவில் பிசிசிஐ வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றதை ரசிகர்கள் மட்டுமின்றி, சில அணியின் சில வீரர்களும் விமர்சித்ததாக தகவல் உள்ளதும் இந்த நியமத்திற்கு வித்திட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
