ஆத்தாடி இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா? பைக்'ல போகும் போது ஏன் நாய் துரத்துகிறது தெரியுமா!
பெரும்பாலும் நாம் வாகனத்தில் செல்லும் போது, நாய் துரத்துவதை எதிர்கொண்டே தான் வருகிறோம்.
துரத்தும் நாய்
வண்டி ஓட்டும் நபர்களிடம் உங்களின் பெரிய பயம் எதுவென கேட்டால் குழப்பமே இல்லாமல், ஒரே மாதிரியாக அனைவரும் கூறுவது ஒரே விஷயமாக தான் இருக்கும் - அது நாய் துரத்துவது.
சாதுவாக ரோட்டின் ஓரம் உறங்கி கொண்டிருக்கும் பைரவரின் வாகனம், நமது வாகனத்தை பார்த்தால் போதும், திடீரென வன்மம் கொண்டு பின்னாலேயே பாய்ந்து வருகின்றன.
இதில், பலர் அலறி நிலை தடுமாறி கீழயும் விழுகிறார்கள். சிலர், வேகமாக சென்று தப்பித்து விடுகிறார்கள். இதில் புரியாத புதிர் எதுவென்றால், நாம் அந்த சாலை பக்கமே போயிருக்க மாட்டோம். அப்படி ஒரு நாயிடம் நாம் எவ்வகையிலும் சீண்டியிருக்க மாட்டோம்.
ஆனால், நம்மை கண்டால் சங்கை கடித்து விடுவேன் என்ற ஆக்ரோஷத்தில் அவை நம்மை துரத்தும் காரணம் அறிந்தால் உங்களுக்கு தலை சுற்றிவிடும். அந்த வினோத விஷயத்தின் விளக்கத்தை படியுங்கள்.
இப்படி ஒரு காரணமா?
அதாவது நிறைய இடங்களில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனத்தில் நாய்கள் சிறுநீர் கழிப்பதை நாம் கண்டிருப்போம். அப்படி, ஒரு ஏரியாவை விட்டு நாம் மற்றொரு ஏரியாவிற்கு சென்றால், இந்த வாசத்தை வைத்து அந்நாய்கள் நம்மை துரத்துகின்றன.
அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இது ஒரு வகையான gang war ஆகும். நாய்கள் தங்களுக்குள் தனித்தனி குழுவாக ஆளுக்கு ஒவ்வொரு ஏரியாவை பிரித்து கொள்கின்றன.
உன் ஏரியாவுக்கு நான் வா மாட்டேன் - என் ஏரியாவுக்கு நீ வராத என்ற டிலிங்க் அடிப்படையில் அவை வசிப்பதாக கூறப்படுகிறது. இதில், தான் நாம் அப்பாவியாக மாட்டிக்கொள்கிறோம்.