சிறுமியை துன்புறுத்தி கொலை செய்ய இதுதான் காரணம் - கைதான பெண் அதிர்ச்சி வாக்குமூலம்!
14 வயது சிறுமி சித்ரவதை செய்து அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கொலை
சென்னை அமைந்தகரை, சதாசிவம் தெருவில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.இங்கு வசித்து வருபவர் முகமது நவாஸ். இவரது மனைவி பெயர் நபியா. இவர்கள் வீட்டில் தஞ்சாவூரை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ள நிலையில்,
அவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2023ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சிறுமி முகமது நிஷாத் என்பவரின் குழந்தையின் பராமரிப்பாளராக வேலைக்கு வந்துள்ளார் என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
வாக்குமூலம்
இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முகமது நிஷாத் அவரது மனைவி நிவேதா என்ற நாசியா, லோகேஷ் அவரது மனைவி ஜெயசக்தி, வீட்டு வேலைக்கார பெண் மகேஸ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
3 மாதங்களுக்கும் மேலாக சிறுமியை அடிக்கடி சித்ரவதை செய்து துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. தீபாவளி அன்று சிறுமியை தாக்கி அயன்பாக்ஸால் சூடு வைத்து அடித்ததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், சிறுமியின் மீது தனது கணவரின் பார்வை திரும்பியதாக சந்தேகப்பட்டு,
கொடூரமாக சித்தரவதை செய்ததாக கைதான நாசியா வாக்குமூலம் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி சிறுமியின் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவரை மற்றவர்களும் பெல்ட் மற்றும் மூங்கில் கம்பால் அடித்து, அயன்பாக்ஸ், சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்தியது தெரியவந்தது.