உடலில் வெண்புள்ளிகள் ஏன் வருகிறது தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

By Sumathi Jun 25, 2024 07:11 AM GMT
Report

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதி உலக வெண்புள்ளி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

விட்டிலிகோ

உலகம் முழுவதும் 70 மில்லியன் மக்களுக்கு வெண்புள்ளி (விட்டிலிகோ) உள்ளது. இது ஒரு தொற்று நோய் அல்ல. பலர் இது ஒரு தொற்று நோய் என்று நினைத்துக் கொண்டு வெண்புள்ளி பாதிப்புள்ளவர்களை விலக்கி வைப்பதும்,

vitiligo

ஒதுக்கி வைப்பதுமாக அவர்களை மன ரீதியாக துன்புறுத்துகிறார்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனப்பாகுபாடு இன்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

என்ன காரணம்?  

ஒரு நபரின் நோய் எதிர்ப்பு அமைப்பு உடலின் செல்களை தாக்கும்போது உடலில் வெண்புள்ளி ஏற்படுகிறது. நமது சருமத்துக்கு நிறத்தை அளிக்கும் மெலனோசைட் என்கிற சுரப்பியை வெள்ளை அணுக்கள் அழிப்பதால்தான் உடலில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படுகின்றன.

உடலில் வெண்புள்ளிகள் ஏன் வருகிறது தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | Reason For Appearance White Spots On Body Vitiligo

சருமத்தில் உள்ள அனைத்து வெள்ளைத் திட்டுகளும் விட்டிலிகோ அல்ல. பூஞ்சைத்தொற்று, தீக்காயங்கள் தொழு நோய் போன்ற பிற சரும நிலைகள் வெள்ளைத் திட்டுகளில்தான் தொடங்கும். சிலருக்கு பரம்பரையாக மரபணு சார்ந்து வெண்புள்ளி ஏற்படலாம்.

தைராய்டு, சர்க்கரை நோய், வைட்டமின் பி 12 குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்த சோகையின் தீவிர நிலை போன்ற நோய்களோடு சேர்ந்தும் வரலாம். வெண்புள்ளி துரிதமாக அதிகரிப்பதற்குச் சில நேரங்களில் மன அழுத்தமும் காரணமாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சை 

பொதுவாக, வெண்புள்ளி உடலின் ஏதாவது ஒரு இடத்தில் தோன்றி, பின் உடல் முழுவதும் பரவி வெள்ளையாகிவிடும். வெண்புள்ளிகளுக்கு மருந்துகள் மற்றும் கிரீம்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை இருக்கிறது. மேலும், யூவி தெரபி என்ற புற ஊதா ஒளி செலுத்தப்பட்டு அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு இடத்தில் மட்டும் அதிகமா முடி கொட்டுதா?.. அப்போ கன்பார்ம் இந்த பிரச்சனை தான்!

ஒரு இடத்தில் மட்டும் அதிகமா முடி கொட்டுதா?.. அப்போ கன்பார்ம் இந்த பிரச்சனை தான்!

வெண்புள்ளி என்பது ஆட்டோ இம்யூன் நோய். எனவே, இதை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குவதை நாம் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.