பணம் இல்லாம தான் - போண்டா மணி மரணம் - அதிர்ச்சி பின்னணி - பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்..!
பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் போண்டா மணி நேற்று முன்தினம் இரவு இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
போண்டா மணி
சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினாலும், தமிழக ரசிகர்களுக்கு மிகவும் அறிமுகமான பிரபலமான நடிகராகவே போண்டா மணி இருந்தார். வடிவேலு, விவேக் என பலருடன் இவரின் காமெடி காட்சிகள் அசத்தலாக அமைய ரசிகர்களுக்கும் நெருக்கமான நடிகராக இருந்து வந்தார்.
சில காலமாகவே உடல் நல பிரச்சினையினால் அவதியுற்று வந்த போண்டா மணி நேற்று முந்தின இரவு இயற்கை எய்தினார். இந்நிலையில், போண்டா மணி குறித்த பல தெரிந்திடாத தகவல்களை நடிகர் பயில்வான் தெரிவித்துள்ளார்.
பணம் இல்லாம தான்
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த ஆண்டு இரண்டு கிட்னியும் போண்டா மணிக்கு செயல் இழந்த நிலையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் காத்துக் கொண்டிருந்தார் என்று தெரிவித்த பயில்வான்,
அதில் கொடுமையான விஷயம் இரண்டு முறை கிட்னி கிடைத்தும், அவருக்கு பொருந்தாதலால் சிகிச்சை நடைபெறாமல் போனது என்றும் பயில்வான் தெரிவித்தார்.
மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் நிலையில் போண்டா மணி இருந்ததாக கூறி, இறந்த அன்று அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்து
கையில் பணம் இல்லாததால் அதனை தள்ளிப்போட அதற்குள் அவரின் உயிர் பிரிந்துள்ளது என கண் கலங்கியபடி கூறியுள்ளார் பயில்வான்.