கமலுடன் முத்தக்காட்சி சீன் - கேரவன்-ல கதறி அழுதேன் - போட்டுடைத்த மீனா..!

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகை மீனா பேட்டி ஒன்றில் நடிகர் கமலுடன் தான் நடித்த அவ்வை சண்முகி படத்தின் குறித்த அனுபவங்களை பகிர்நது கொண்டுள்ளார்.
மீனா
தமிழ் நடிகைகளில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளனர் மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தினார்.
தற்போது துணை காதாபாத்திரங்களில் அவ்வப்போது படங்களில் தோன்றி வரும் மீனா, தனியார் பேட்டிகளில் தனது திரை அனுபவங்களை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அப்படி அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் அவ்வை சண்முகி படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த பேட்டியில், கமல் ஹாசன் சாரின் படம் என்றால் லிப் டு லிப் காட்சி இருக்கும் எனக் குறிப்பிட்ட மீனா படத்தை எடுக்க முடிவு செய்தபோது அதைப் பற்றி தான் யோசிக்கவில்லை என்றார்.
கமலுடன் லிப்லாக்
ஆனால், இரண்டாம் நாள் உதவி இயக்குநர் வந்து முத்தக் காட்சி இருக்கிறது என்றபோது, தான் பயந்துவிட்டேன் என்ற மீனா, எப்படி செய்வது என பயந்து என்னால முடியாது, டைரக்டரிடம் சொல்லுங்கள் என சொன்னதாக தெரிவித்தார்.
அதற்குள் ஷாட் ரெடி என்று சொல்லி தான் அழுத்ததாக சொன்ன மீனா, இந்த உரையாடல் தனக்கும் அம்மாவுக்கும் நடுவில் நடந்தது என குறிப்பிட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருக்கும் தெரியாது என்றும் கூறினார். கமல் சார் அருகில் வந்து இந்த முறை நோ லிப்லாக் என்று சொன்னதும் தான் தனக்கு உயிர் வந்தது என்று வெளிப்படையாக பேட்டியில் தெரிவித்தார் மீனா.
You May Like This Video