‘K’ என்ற எழுத்தை ஆயிரம் என்பதற்கு பதில் ஏன் யூஸ் பண்றோம் தெரியுமா? பலருக்கும் தெரியாது!
ஆயிரம் என்பதற்கு ‘K’ என்ற எழுத்தை பயன்படுத்துவது ஏன் எனத் தெரிந்துக்கொள்வோம்.
‘K’ என்ற குறியீடு
இணையதளங்களில் ‘1000’ என்ற எண்ணிற்கு ஆங்கில எழுத்தான ‘K’ என்று குறிப்பதை நாம் பார்த்திருப்போம். ஏன்? நாமே கூட பயன்படுத்தியிருப்போம்.
மில்லியன் என்ற எண்ணிற்கு ‘M’ என்ற எழுத்தும், பில்லியன்-க்கு ‘B’ என்ற குறியீடும் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் K ஏன் தெரியுமா? கிரேக்க மொழியில் ‘chilioi’ என்றால் ஆயிரம் என்று பொருள்.
பின்னணி
இது பிரெஞ்சுக்காரர்களால் கிலோ என்று சுருக்கப்பட்டது. அதன்பின் தான் கிலோ மீட்டர், கிலோ கிராம் போன்று கணிக்கப்பட்டது. அதில் Kilo என்பதற்காக தான் K என்ற குறியீடு கொடுக்கப்படுகிறது.
எனவே ஆயிரம் என்பதற்கு ‘T’ என்ற எழுத்து பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.