மன்மோகன் சிங் எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிவது ஏன் தெரியுமா? இதான் காரணம்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92) (26.12.2024) அவரது இல்லத்தில் இருந்த போது திடீரென சுயநினைவை இழந்தார். அப்போதே அவருக்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டு, 8:06 மணிக்கு சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 9:51 மணிக்கு உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 1932 செப்டம்பர் 26 ஆம் தேதி பஞ்சாபில் மன்மோகன் சிங் பிறந்தார்.
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர். சர்வதேச பொருளாதார வல்லுநராக அறியப்படும் மன்மோகன் சிங், இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர் எனப் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்தியா மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்த போது, நரசிம்மராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தியா மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்த போது, நரசிம்மராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
காரணம்
இதனிடையே, மன்மோகன் சிங்கின் தலைப்பாகை குறித்த ஒரு தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. அதாவது அவர் எப்போதுமே நீல நிறத்திலேயே தலைப்பாகை அணிந்துள்ளார். சீக்கியர்கள் தலைப்பாகை அணிய வேண்டும் என்பது விதி என்றாலும்
ஏன் அவர் நீல நிறம் கடைப்பிடிப்பதற்கு என்ன காரணம் என்று பலருக்கு தெரியாது. இதற்கான பதிலை மன்மோகன் சிங்கே கடந்த 2013ம் ஆண்டு அளித்திருந்தார். அதாவது, "இது கேம்பிரிட்ஜின் நிறம்.. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நான் படித்த நாட்கள் அழகானவை.
அவை எனது நினைவுகள் எப்போதும் ஆழமாகப் பதிந்து இருக்கும். லைட் நீல நிறம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதன் காரணமாகவே எப்போதும் என் தலைப்பாகை அந்த நிறத்தில் இருக்கும்" என்று குறிப்பிட்டார். அதாவது நீல நிறம் என்பது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நிறமாகும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நிறமான நீல நிறம் என்பது அவருக்கும் பிடித்த ஒரு கலராக இருப்பதாலேயே அவர் எப்போதும் அதே நிறத்தில் டர்பன் அணிந்து இருக்கிறார்.