கோஹினூர் வைரத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? அறியாத பல தகவல்கள்!

India Queen Elizabeth II England
By Sumathi Jan 03, 2025 04:30 PM GMT
Report

கோஹினூர் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துக்கொள்வோம்.

கோஹினூர் வைரம்

கோஹினூர் இந்தியாவின் வைரமாக இருந்தது. தற்போது இங்கிலாந்தின் வசம் உள்ளது. இங்கிலாந்தை அடைவதற்கு முன், இந்த வைரம் பல இந்திய மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தது.

kohinoor diamond

இந்த வைரம் 800 ஆண்டுகளுக்கு முன் ஆந்திரப் பிரதேசம், குண்டூரில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் 186 காரட் எடையைக் கொண்டிருந்தது. தொடர்ந்து பலமுறை வெட்டப்பட்டதன் காரணமாக, அதன் எடை குறைந்தது.

இதனுடைய முதல் அறியப்பட்ட உரிமையாளர் காகதீயா ராஜ்வன்ஷ். ராஜ்வன்ஷ் குடும்பத்தினர் தங்கள் வம்சத்தின் தெய்வமாக வணங்கும் பத்ரகாளியின் இடது கண்ணில் இந்த வைரத்தை வைத்திருந்தனர். 14-ம் நூற்றாண்டில், அலாவுதீன் கில்ஜி கைப்பற்றினார்.

மலையை சாப்பிடுறாங்கனு சொன்னா நம்பமுடியுதா? ஆச்சர்யம் ஆனால் உண்மை - எங்கு தெரியுமா?

மலையை சாப்பிடுறாங்கனு சொன்னா நம்பமுடியுதா? ஆச்சர்யம் ஆனால் உண்மை - எங்கு தெரியுமா?

சுவாரஸ்ய தகவல்

பானிபட் போரின் போது, ​​முகலாய பேரரசர் பாபர் டெல்லி மற்றும் ஆக்ராவின் செங்கோட்டையைக் கைப்பற்றியதோடு, கோஹினூர் வைரத்தையும் அபகரித்து கொண்டார். பின், ஈரானிய ஆட்சியாளர் நாதர் ஷா முகலாய பேரரசரை தோற்கடித்து வைரத்தை கைப்பற்றினர்.

கோஹினூர் வைரத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? அறியாத பல தகவல்கள்! | Real Owner Of Kohinoor Diamond Unknown Facts

இவர்தான் கோஹினூர் என்று பெயரிட்டார். இவரது பேரன் ஷாருக் மிர்சா, ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர் அஹ்மத் ஷா துரானிக்கு வைரத்தை பரிசாக வழங்கினார். சிறிது காலங்களுக்குள்ளே மகாராஜா ரஞ்சித் சிங் அதனை கைப்பற்றினார். 1849-ல், சீக்கியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போர் நடந்தது.

முடிவில், பிரிட்டிஷ் இராணுவம் மகாராஜா குலாப் சிங்கிடம் இருந்து வைரத்தை கைப்பற்றி விக்டோரியா மகாராணியிடம் பரிசளித்தது. அங்கு ராணியின் கிரீடத்தில் அலங்கார நகையாக பொறிக்கப்பட்டது. இதனை மீட்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.