மீனாவை திருமணம் செய்ய தயார்; குழந்தை இருக்கு பரவாயில்லை - சொன்ன பிரபலம் யார் தெரியுமா?
மீனாவை திருமணம் செய்ய தயார் எனக் கூறி யூடியூபர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக தலைகாட்டி வருகிறார்.
யூடியூபர் சர்ச்சை
இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்த "ஆராத்" என்கின்ற திரைப்படத்தின் சர்ச்சையான விமர்சனத்தால் பிரபலமானவர் சந்தோஷ் வர்கீ. இவர் தற்போது, நடிகை மீனா அவர்களை தான் திருமணம் செய்துகொள்ள தயார். அவருக்கு ஒரு பெண் குழந்தைக்கு இருப்பது தனக்கு தெரியும்.
இருப்பினும் அதை பற்றி தனக்கு கவலை இல்லை எனத் தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
முன்னதாக, நடிகை நித்யா மேனன், கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனையும் தான் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக இவர் பேசியது குறிப்பிடத்தக்கது.