பான் கார்டு வச்சுருக்கீங்களா? கண்டிப்பா இந்த தகவலை தெரிஞ்சுக்கோங்க..!
நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவை.
பான் கார்டு
ஒருவர் வங்கிக் கணக்கை தொடங்க பான் கார்டு தேவை. 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணத்தை அனுப்புவதற்கு பான் கார்டு அவசியம். இது தவிர, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு அப்ளை செய்வதற்கும் பான் கார்டு அவசியம்.
ஒரு நபர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு பான் கார்ட் மட்டுமே பயன்படுத்தமுடியும். இந்த கார்ட் வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் பான் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
மீண்டும் ஆக்டிவேட்..
நாடு முழுவதும் சுமார் 11.5 கோடி பான் கார்டுகளை சமீபத்தில் அரசு ரத்து செய்தது. அரசு உத்தரவின்படி, பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிட்டால், அதை ஆக்டிவேட் செய்ய ஒரு வழி உள்ளது.
உங்கள் பான் கார்டை மீண்டும் செயல்படுத்த விரும்பினால், வருமான வரித் துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட AO-க்கு (மதிப்பீட்டு அதிகாரி) நீங்கள் எழுதி கடிதம் அனுப்ப வேண்டும். ரத்து செய்யப்பட்ட பான் கார்டை மீண்டும் செயல்படுத்த தேவையான ஆவணங்கள் கடிதத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதனுடன், செயலில் உள்ள பான் எண்ணுக்கு கடந்த மூன்று வருட வருமான வரிக் கணக்கின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். கடிதத்தை சமர்ப்பித்த பிறகு பான் கார்டை மீண்டும் செயல்படுத்த குறைந்தது 10 முதல் 15 நாட்கள் ஆகும். விண்னப்ப நிலையை ஆன்லைனில் அறிந்து கொள்ளலாம்.