முக்கியமானது இந்த பான் கார்டு தான்..! உடனே சரி பாருங்கள் - இல்லை என்றால் அபாரதம்

Government Of India
By Thahir Mar 01, 2023 09:27 AM GMT
Report

பான் கார்டுடன் (Permanent account number) ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. முன்னதாக இந்த நடவடிக்கையை பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியோடு நிறைவு பெற்றது.

ஆன்லைன் வழியாக கட்டாயம் அபராதம் 

இந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதிக்கெடுவுக்கு முன்பாக பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்காத பொதுமக்கள் தற்போது ஆன்லைன் வாயிலாக அபராதம் கட்டிய பின் இந்த இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

how-to-check-if-your-aadhaar-is-linked-with-pan-card

இதையும் கூட நீங்கள் செய்ய தவறும் பட்சத்தில் மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு உங்களுடைய பான் கார்டை நீங்கள் பயன்படுத்த இயலாது.

இது கட்டாயமானது, அவசியமானது. ஆகவே தாமதமின்றி இன்றே செய்யவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செக் செய்வது எப்படி? 

நீங்கள் ஏற்கனவே இணைத்துவிட்டீர்கள் என்றாலும் ஒருமுறை அதனை சரிபார்த்துக்கொள்ளுங்கள். எப்படி இணையதளத்தில் செக் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். 

how-to-check-if-your-aadhaar-is-linked-with-pan-card

https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதளப்பக்கத்துக்குச் செல்ல வேண்டும் link aadhaar status என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து அங்குள்ள எழுத்தை (Captcha) அப்படியே பதிவு செய்ய வேண்டும் பின்னர் பான் கார்டு இணைப்பு தொடர்பான தகவலை பெறலாம்