RCB vs LSG; 157 கிமீ வேகத்தில் பறந்த பால் விக்கெட் மழையை குவித்த மயங்க் யாதவ்!
2 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அசத்திய மயங்க் யாதவ் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் .
விக்கெட் மழை
நடப்பாண்டின் ஐபிஎல் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதினர்.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. 182 ரன்களை சேஸ் செய்த ஆர்சிபி அணி. 19.4 ஓவர்களில் வரிசையாக விக்கெட்களை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த போட்டியில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மயங்க் யாதவ்
கடந்த 2 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய மயங்க் யாதவ் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
21 வயதேயான அவர் 157 கிமீ வேகத்தில் பவுலிங் செய்வது அனைவரையும் ஈர்த்துள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் மற்றும் ரஜத் பட்டிதர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து, லக்னோ அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்துள்ளார் மயங்க் யாதவ்.
இதனால், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய மயங்க் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.