RCB அணிக்கு ஆரம்பித்த தலைவலி - முக்கிய வீரருக்கு கால் முறிவு!
ஆர்சிபியின் முக்கிய வீரருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
ஆர்சிபி
8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிலையில் சூப்பர்-12 சுற்றுடன் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா அணி வெளியேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நண்பரின் பிறந்த நாள் பார்டிக்கு சென்று மேக்ஸ்வெல் கலந்துக்கொண்டுள்ளார்.
அப்போது அவர் அங்கு விளையாட்டாக ஓடி வரும்போது கால் வழுக்கி விழுந்துள்ளார். அதில் எதிர்பாராதவிதமாக அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து உடனடியாக மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மேக்ஸ்வெல்லுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மேக்ஸ்வெல்
அடுத்த 3 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இருக்கும் மேக்ஸ்வெல் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஆர்சிபி இயக்குநர் மைக்ஹெசன் பேசும்போது, "மேக்ஸ்வெல் காயமடைந்திருப்பது வருத்தம் தான். அவருடைய காயம் கவலை அளித்தாலும், ஐபிஎல் தொடருக்கு முன்பாக குணமடைந்து களத்துக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. மேக்ஸ்வெல் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.