சில நேரங்களில் தோற்பதும் நல்லது - வாய்விட்டு சிக்கிய ஆர்சிபி கேப்டன்
தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கேப்டன் பேச்சு
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி முதல் 2 இடங்களை பிடிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபியின் பொறுப்பு கேப்டன் ஜிதேஷ் சர்மா, ''சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கூடுதலாக 20 முதல் 30 ரன்கள் விட்டுக் கொடுத்து விட்டோம். பவர்பிளேயில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.
ரசிகர்கள் காட்டம்
ஆட்டத்தின் தொடக்கத்தில் நாங்கள் தீவிரமாக செயல்படவில்லை. ஆனாலும் எங்களுடைய பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இந்த ஆட்டத்தில் தோற்றது நல்லது என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில் ஒரு ஆட்டத்தில் தோற்றது ஒரு நல்ல அறிகுறியாகும்.
ஏனென்றால் நீங்கள் எங்கு குறைபாடு உள்ளீர்கள் என்பதை சரிபார்த்து பகுப்பாய்வு செய்யலாம். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால், உங்கள் தவறுகளை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.
இந்த தோல்விக்க்கான காரணங்களை பகுப்பாய்வு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இது ஆர்சிபிக்கு ஒரு முக்கியமான மேட்ச். கேப்டன் இப்படி பொறுப்பில்லாமல் பேசுவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.