தோனி அறையில் நடப்பதற்கே கஷ்டப்படுறார் - போட்டுடைத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்
தோனி நடக்கவே சிரமப்படுவதாக அனிருதா ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
வில்லனான தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர், மொத்தமாகவே 196 ரன்களை எடுத்து, சராசரியாக 24.50 ரன்களை எடுத்துள்ளார்.
இந்த சீசனில் அவரது ஃபார்ம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. எனவேஅதிகப்படியான விமர்சனத்தை சந்தித்தார். இந்நிலையில் தோனி குறித்து பல தகவல்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான அனிருதா ஸ்ரீகாந்த் பகிர்ந்துள்ளார்.
அனிருதா தகவல்
“ஒரு வருடத்தில் 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல், 3 மாதங்கள் மட்டும் 43 வயதில் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் சிரமம். உங்களது ரன் எடுக்கும் திறன் உங்களிடம் அப்படியே இருந்தாலும், அது 14 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் அதே உடற்தகுதியோடு விளையாடுவது கடினம்.
மேலும் எனக்கு கிடைத்த தகவலின்படி, தோனியின் முழங்கால் முற்றிலுமாக காயமடைந்துள்ளது. அவர் தனது அறையில் எழுந்து கதவு வரை நடப்பதற்கே சிரமப்படுகிறார்.
மிக நீண்ட நாட்களாக இருந்தால் வில்லனாகி விடுவோம் என்ற வாசகம் உள்ளது. அதுபோல நீண்ட நாட்கள் இருந்து தோனி அப்படி ஆகிக்கொண்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
