இணையத்தில் ட்ரெண்டாகும் தேச துரோகி தோனி - ஹர்பஜன் சிங்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை
தேசதுரோகி தோனி, மற்றும் NationalShameKohli என இணையத்தில் ட்ரெண்ட் செய்து கிரிக்கெட் ரசிகர்கள் மோதிக்கொண்டுள்ளனர்.
ஹர்பஜன் சிங் பேச்சு
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், "தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். அவருக்கு உண்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மற்றவர்கள் எல்லாம் சமூக வலைதளத்தை சார்ந்து இருக்கிறார்கள். சிலர் காசு கொடுத்து ரசிகர்களை வைத்து இருக்கிறார்கள்" என பேசினார்.
ரசிகர்கள் மோதல்
சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட்டில் ஓய்வு பெற்ற நிலையில், அவரை கௌரவிக்க கோலியின் ரசிகர்கள் நேற்றைய ஐபிஎல் போட்டிக்கு விராட் கோலி பெயர் பொறித்த வெள்ளை நிற ஜெர்சியை அணிந்து வந்தனர்.
தற்போது ஹர்பஜன் சிங்கின் பேச்சு இணையத்தில் வைரலான நிலையில், விராட் கோலியின் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக SHAME ON DESHDROHI DHONI என கோலியின் ரசிகர்களும், NationalShameKohli என தோனி ரசிகர்களும் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
