மக்களே உங்களிடம் 10,20 ரூபாய் நாணயங்கள் உள்ளாதா? RBI விடுத்த எச்சரிக்கை!
ரூ.10 மற்றும் 20 நாணயங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாணயங்கள்
தமிழ்நாட்டின் சென்னையை தாண்டிவிட்டால் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் ரூ.10,20 நாணயங்களை வாங்க மறுக்கின்றனர் என பல புகார்கள் எழுந்துக் கொண்டே இருக்கிறது.
ஏனென்றால் இவை போலியானவை மற்றும் கடைக்காரர்கள் மற்றும் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையாம். இந்த நாணயங்கள் செல்லுபடியாகும் என அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் பலமுறை கூறியும் தொடர்ந்து மறுக்கப்படுவதால் ரிசர்வ் வங்கி மேலும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதாவது, இந்த நாணயங்களை வாங்க மறுத்தால் சட்டப்படி குற்றமாகும். அவர்கள் மீது புகார் அளிக்கலாம். நாணயங்களை ஏற்க மறுப்பவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யலாம். அவர் மீது இந்திய நாணயச் சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
எச்சரிக்கை
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிலும் கடைக்காரர் அல்லது நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளிக்கலாம். ஐதராபாத்தில் உள்ள சில கடைகள் ரூ.10 நாணயத்தை மறுப்பவர்கள் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை பலகைகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை நிராகரிப்பது குற்றமாகும். நிராகரிப்பது மட்டுமின்றி, அவை செல்லாது என்று சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாகவும், அவை நிராகரிக்கப்பட்டால் புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாராவது மறுத்தால், ஐபிசி பிரிவு 124ன் கீழ் புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.