3 விதமான வங்கி கணக்கை முடக்கிய ஆர்பிஐ - கவனமா இருங்க மக்களே..
ஆர்பிஐ வங்கி விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கி விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. நவம்பர் 20, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த விதிமுறைகள்,

குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளை மூடுவதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ வழிவகுக்கும். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் கணக்கில் நான்கு வரை பரிந்துரைக்கப்பட்ட நபர்களை (nominees) சேர்க்க முடியும்.
நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் உள்ள அல்லது இருப்பு இல்லாத கணக்குகள் இந்த புதிய விதிகளால் பெரிதும் பாதிக்கப்படும். பல வருடங்களாக எந்த பரிவர்த்தனையும் இல்லாத வங்கிக் கணக்குகள் மூடப்படும் அல்லது அவற்றின் செயல்பாடு கட்டுப்படுத்தப்படும்.
வங்கி விதிமுறை
மேலும், மூன்று வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்: செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள் (Inactive) மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (Zero Balance Accounts). முன்னர் ஒரு பரிந்துரைக்கப்பட்ட நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில்,

இப்போது ஒரு கணக்கில் நான்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களைச் சேர்க்கலாம். ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிகள் வங்கி முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கான ஒரு முக்கிய படி என கூறப்படுகிறது.