வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம் - ரிசர்வ் வங்கியின் புதிய விதி
வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய விதி ஒன்றை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி
வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் இறந்து போனால் அவர்களின் கணக்கில் உள்ள பணத்தை குடும்ப உறுப்பினர்கள் பெறுவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதனை எளிமைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாமினி
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து விதமான வங்கிக் கணக்குகள் மற்றும் லாக்கர் வசதிக்கு வாரிசுதாரர்(Nominee) நியமனம் செய்வது கட்டாயம். இது குறித்து வங்கிகள் வாடிக்கையாளருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு எந்த சட்ட சிக்கல் மற்றும் தாமதம் இல்லாமல் அந்த பணம் வாரிசுதாரருக்கு செல்லும். வங்கி கணக்கு திறப்பதற்கான விண்ணப்ப படிவத்தில் நாமினி பெயரைக் குறிப்பிடுவதற்கான இடம் இல்லை என்றால் அதனை சேர்க்க வேண்டும்.
சட்டப்பூர்வ வாரிசுகளின் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை சரியான முறையில் கையாள வங்கி ஊழியர்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 31 மார்ச் 2025 ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின், DAKSH போர்ட்டலில் காலாண்டுக்கு ஒருமுறை வாரிசுதாரர் நியமிக்கப்பட்டுள்ளதில் அடைந்துள்ள முன்னேற்றத்தை வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.