ரிசர்வ் வங்கி கவர்னர் அப்பல்லோவில் அனுமதி - அறிக்கை வெளியீடு!
ரிசர்வ் வங்கி கவர்னர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்(67). ஒடிசாவைச் சேர்ந்த இவர், தமிழக அரசில் பல்வேறு துறைகளிலும், மத்திய நிதித்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்தநிலையில், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
உடல்நலக்குறைவு
இந்நிலையில், இவருக்கு அசிடிட்டி (acidity) பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளார்.

அடுத்த சில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திகாந்த தாஸ் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
Pandian Stores 2: அண்ணன்களால் வெளியே வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்... நெகிழ வைத்த ப்ரொமோ காட்சி Manithan
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan