ரூ.5000 நோட்டு பயன்பாட்டுக்கு வருகிறதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
ரூ.5000 நோட்டு பயன்பாட்டுக்கு வருவதாக வெளியான தகவலுக்கு ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
ரூ.5000 நோட்டு
தற்போது இந்தியாவில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.
முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் நோட்டின் புழக்கத்தை நிறுத்தி விட்டு 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது.
ரிசர்வ் வங்கி
இதனையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் ரூ.2000 நோட்டு தயாரிப்பை நிறுத்தியதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்கு பதிலாக பச்சை நிறத்தில் ரூ.5000 நோட்டு புழக்கத்துக்கு வருவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில், ரூ.5000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்றும், புதிய நோட்டு அறிமுகம் செய்தால் ரிசர்வ் வங்கி அல்லது நிதி அமைச்சகம்அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.