வெளியாகும் ரூ.350 நோட்டு? வைரலாகும் புகைப்படம்!
350 ரூபாய் புதிய நோட்டு வெளியானதாக தகவல் பரவி வருகிறது.
350 ரூபாய் நோட்டு
ஒரு ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டாலும், புதிய ரூபாய் நோட்டுகள் உருவாக்கினாலும் இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாகவே அறிவிக்கும் என்பது வழக்கம்.
ஆனால், 350 ரூபாய் புதிய நோட்டு வெளியிடப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படத்துடன் தகவல் பரவி வருகிறது. சந்தையில் ரூ.350 நோட்டுகள் நுழைந்துவிட்டன என்று கூறி, பேஸ்புக் பயனர்கள் ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்டனர்.
வைரல் ஃபோட்டோ
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இதனைப்பார்த்த பொதுமக்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று பிடிஐ உண்மைச் சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.
புதிய நோட்டுகள் எதையும் அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ரிசர்வ் வங்கி தற்போது 10, 20, 50, 100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே புழக்கத்தில் விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.