எலான் மஸ்க்குடன் இணையும் ஏர்டெல், ஜியோ - விரைவில் இந்தியாவில் இணைய சேவை!
ஸ்டார்லிங்குடன் இணைந்து ஏர்டெல் மற்றும் ஜியோ இணைய சேவைகளை வழங்கவுள்ளது.
ஸ்டார்லிங்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் இணையச் சேவைகளை வழங்கி வருகிறது.
தொடர்ந்து இந்தியாவில் சேவையாற்ற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஏற்று உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகியது.
ஜியோ-ஏர்டெல்
இந்நிலையில், இந்த நிறுவனத்துடன் இணைந்து சேவையாற்ற ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக
ஏர்டெல் நிறுவன நிர்வாக இயக்குநரும், துணைத் தலைவருமான கோபால் விட்டல் கூறியுள்ளார். இதனையடுத்து தற்போது ஸ்டார் லிங்க் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற இருப்பதாக ஜியோ நிறுவனமும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.