இந்தியாவின் முதல் மொபைல் அழைப்பு கட்டணம் எவ்வளவு தெரியுமா?ஆச்சரிய தகவல்!
இந்தியாவின் முதல் மொபைல் அழைப்பை செய்தவர் யார் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மொபைல்
இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. தற்பொழுது 4ஜி, 5ஜியை தொடர்ந்து 6ஜி என்ற சேவையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
நாட்டிற்குள் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் மொபைல் போன் அழைப்புகளை இலவசமாக்கி, பிற நாடுகளுக்கான அழைப்புகளுக்கு நியாயமான கட்டணங்களை வசுலித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் முதல் மொபைல் அழைப்பை செய்தவர் யார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
கட்டணம்
இது குறித்து விரிவாக பார்க்கலாம். ஜூலை 31, 1995 அன்று, அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு, நோக்கியா கைபேசியைப் பயன்படுத்தி, இந்தியாவின் முதல் மொபைல் போன் அழைப்பை செய்துள்ளார்.
இது கொல்கத்தா - டெல்லி ஆகிய இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையேயான அழைப்பு இனைக்கப்பட்டது. அன்றைய காலத்தில் அழைப்புக் கட்டணங்கள் டைனமிக் விலை நிர்ணய மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை. இதன் விலை நிமிடத்திற்கு ரூ.8.4 (தற்போதைய மதிப்பில் சுமார் ரூ.23) ஆகும்.