திரும்ப பெறப்படும் ரூ.200 நோட்டுகள் - RBI பரபரப்பு விளக்கம்!
200 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.
200 ரூபாய் நோட்டு
நாட்டில் போலி 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, பரிவர்த்தனைகளின் போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
RBI விளக்கம்
இடதுபுறம் தேவநாகரி எழுத்தில் 200 எழுதப்பட்டிருக்கும், நடுவில் மகாத்மா காந்தியின் தெளிவான படம், நுண் எழுத்துக்கள் 'RBI', 'பாரதம்', 'இந்தியா', மற்றும் '200', வலதுபுறம் அசோகத் தூண் சின்னம் போன்றவை 200ரூ நோட்டில் இடம்பெற்றிருக்கும்.
போலி நோட்டைப் பெற்றால், உடனடியாக உள்ளூர் நிர்வாகத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கோ தெரிவிக்க வேண்டும்.
மேலும், 20 ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.