இந்த வங்கி இனி இயங்காது; பணம் எடுக்க முடியாது - கலக்கத்தில் மக்கள்!
பிரபல வங்கி ஒன்றின் உரிமத்தை ரிசர்வ் வங்கி திடீரென்று ரத்து செய்துள்ளது.
வங்கி உரிமம் ரத்து
விஜயவாடாவைச் சேர்ந்த பிரபல வங்கி துர்கா நகர்ப்புற கூட்டுறவு. இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. தொடர்ந்து இதுதொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், வங்கி தொடர்பான அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வங்கி தொடர்ந்து விதிமுறைகளை புறக்கணித்து வருகிறது. வங்கியிடம் தொடர்ந்து செயல்பட போதிய பணம் இல்லை.
ரிசர்வ் வங்கி முடிவு
இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இழப்பீடு பெறுவார்கள். வாடிக்கையாளர்களின் மொத்தத் தொகை ரூ.5 லட்சம் வரை காப்பீடு செய்யப்பட்டே இருக்கும். வாடிக்கையாளர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலமாகவே பல வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளதுடன் கடுமையான நடவடிக்கை எடுத்து உரிமத்தையும் ரிசர்வ் வங்கி ரத்து செய்து வருகிறது. பலமுறை எச்சரித்த பிறகே இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.