மக்களே எச்சரிக்கை.. இனி இந்த வங்கி இயங்காது.. பணமும் எடுக்க முடியாது - ஷாக் அறிவிப்பு!

India Andhra Pradesh World Reserve Bank of India
By Swetha Nov 14, 2024 08:30 PM GMT
Report

பிரபல வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ததால் இனி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி

ஆந்திரா, விஜயவாடாவைச் சேர்ந்த துர்கா நகர்ப்புற கூட்டுறவு வங்கி மிகவும் பிரபலமாக இயங்கி வந்துள்ளது. அதன் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், வங்கி தொடர்பான அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

மக்களே எச்சரிக்கை.. இனி இந்த வங்கி இயங்காது.. பணமும் எடுக்க முடியாது - ஷாக் அறிவிப்பு! | Rbi Cancelled The Bank License In Vijayawada

இந்த வங்கி தொடர்ந்து விதிமுறைகளை புறக்கணித்து வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், வங்கியிடம் செயல்பட போதிய பணம் இல்லை. அதனால்தான் பலமுறை எச்சரித்த பிறகு இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. திடீரென்று இந்த வங்கி மூடப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களும் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, கணக்கு வைத்திருக்கும் வங்கியில் உங்களுக்கு 10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் இருந்தாலும் அந்த வங்கியை மூடினால் டெபாசிட் இன்சூரன்ஸ் காப்பீட்டின் கீழ் உங்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே கிடைக்கும்.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மூடப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் மொத்தத் தொகை ரூ.5 லட்சம் வரை காப்பீடு செய்யப்பட்டே இருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை,

ஷாக்.. 2 பிரபல வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் பேங்க் - என்ன காரணம்?

ஷாக்.. 2 பிரபல வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் பேங்க் - என்ன காரணம்?

ஷாக் அறிவிப்பு

அதாவது, வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு மாநிலங்களில் செயல்படும் வங்கிகளில் நிதி மோசடி உட்பட பல வகையான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அந்த விவகாரங்களில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

மக்களே எச்சரிக்கை.. இனி இந்த வங்கி இயங்காது.. பணமும் எடுக்க முடியாது - ஷாக் அறிவிப்பு! | Rbi Cancelled The Bank License In Vijayawada

இதனால் பல்வேறு கூட்டுறவு வங்கிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அண்மை காலமாக பல வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளதுடன்

கடுமையான நடவடிக்கை எடுத்து உரிமத்தையும் ரத்து செய்து வருகிறது ரிசர்வ் வங்கி. உண்மையில், வாடிக்கையாளர்களின் நலன் என்பதே ரிசர்வ் வங்கியின் முன்னுரிமை ஆகும். அதனால் எந்த வங்கியிலும்,

வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்திருக்கும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம் ஆகும். அதனால்தான் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.