ஷாக்.. 2 பிரபல வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் பேங்க் - என்ன காரணம்?

India Reserve Bank of India
By Vinothini Sep 24, 2023 06:45 AM GMT
Report

ரிசர்வ் வாங்கி இரண்டு பிரபல வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.

அதிரடி ஆக்ஷன்

இந்திய ரிசர்வ் வங்கி இந்த வாரம் மூன்று வங்கிகளின் உரிமங்கள் ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில், பல வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வங்கிகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சமயத்தில் திருவனந்தபுரம் அனந்தசயனம் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக செப்டம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

rbi-canceled-lisence-for-2-banks

மேலும், மல்லிகார்ஜுனா பட்டான கூட்டுறவு வங்கி நியாமிதா (மஸ்கி, கர்நாடகா) மற்றும் தேசிய கூட்டுறவு வங்கி லிமிடெட் (பஹ்ரைச், உபி) ஆகிய இரண்டு வங்கிகளின் உரிமங்களையும் மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

விதிமீறல்

இந்நிலையில், இந்த வங்கிகளுக்கு போதிய மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் திறன் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் இந்த இரண்டு வங்கிகளும் வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 இன் பிரிவு 56, பிரிவு 11 (1) மற்றும் பிரிவு 22 (3)(D) ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்கத் தவறிவிட்டன. இது மட்டுமல்லாமல், இந்த வங்கியால் அதன் முழு பணத்தையும் செலுத்த முடியவில்லை.

rbi-canceled-lisence-for-2-banks

இவை வைப்பாளர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் 22 முதல் மல்லிகார்ஜுன் பட்டான கூட்டுறவு வங்கி நியாமிதா மற்றும் தேசிய கூட்டுறவு வங்கி லிமிடெட் ஆகியவற்றின் வங்கி வணிகத்தை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது.

டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் டெபாசிட்களை திருப்பிச் செலுத்துவதும் இதில் அடங்கும். டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் விதிமுறைகளின் கீழ், ஒவ்வொரு டெபாசிட்டரும் ரூ. 5 லட்சம் வரை தனது டெபாசிட்களை கோருவதற்கு உரிமை பெறுவார்கள்.