11 வங்கிகளின் உரிமம் ரத்து; பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் - உங்க வங்கியும் உள்ளதா?
11 வங்கிகளின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
இந்திய ரிசர்வ்
வங்கி இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள மைய வங்கியாகும். மக்கள் இந்த வங்கியை நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி தான் இந்தியாவில் உள்ள பிற வங்கிகளை கட்டுப்படுத்துகிறது.
இந்நிலையில் வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு 11 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
உரிமம் ரத்து
நிதி நிலைமை, வைப்புத்தொகையாளர்களின் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கும் இயலாத வங்கிகள், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் விதிகளை மீறியது என பல காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வங்கிகளின் பட்டியல் பின்வருமாறு,
1. துர்கா கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட், விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம்
2. ஸ்ரீ மகாலட்சுமி மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், தபோய், குஜராத்
3. ஹிரியூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், ஹிரியூர், கர்நாடகா
4. ஜெய் பிரகாஷ் நாராயண் நகரி சககாரி வங்கி லிமிடெட், பாஸ்மத்நகர், மகாராஷ்டிரா
5. சுமேர்பூர் மெர்கன்டைல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், சுமர்பூர், பாலி, ராஜஸ்தான்
6. பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கி லிமிடெட், காஜிபூர், உத்தரபிரதேசம்.
7. நகர கூட்டுறவு வங்கி லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
8. பனாரஸ் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், வாரணாசி, உத்தரப் பிரதேசம்
9. ஷிம்ஷா சககாரி வங்கி நியமித்ரா, மத்தூர், மாண்டியா, கர்நாடகா
10. உரவகொண்டா கூட்டுறவு நகர வங்கி லிமிடெட், ஆந்திரப் பிரதேசம்
11. தி மஹாபைரப் கூட்டுறவு அர்பன் வங்கி லிமிடெட், தேஜ்பூர், அசாம்
வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள், டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கிரெடிட் கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) சட்டம், 1961 இன் கீழ் இழப்பீடு பெற உரிமை உண்டு. தங்கள் டெபாசிட்டுகளில் ₹5 லட்சம் வரை கோரலாம்.