இந்த 3 வகை வங்கி கணக்குகள் மூடப்படும்; ஜீரோ பேலன்சும்? ரிசர்வ் வங்கி செக்!
மூன்று வகையிலான வங்கி கணக்குகள் முடக்கப்படவுள்ளன.
வங்கி கணக்குகள்
ரிசர்வ் வங்கி அவ்வப்போது பாதுகாப்பு மற்றும் நிதி காரணங்களுக்காக வங்கி விதிகளை மாற்றி வருகிறது. அந்த வகையில், (ஜனவரி 1 2025) முதல் சில முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது.
இந்த மாற்றத்தால் மூன்று வகையிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட உள்ளன. அதன்படி, நீண்ட காலமாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்குகள் அல்லது கடந்த 2 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்குகள் மூடப்படும்.
ரிசர்வ் வங்கி முடிவு
12 மாதங்களாக எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்யப்படாத வங்கி கணக்குகளும் மூடப்படும். வங்கியில் எந்த தொகையும் இல்லாமல் நீண்ட காலத்திற்கு மெயிண்டன் செய்வது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். இந்த வகை வங்கி கணக்குகளில் எந்த வித பரிவர்த்தனையும் குறிப்பிட்ட காலத்திற்கு இல்லையென்றால் முடக்கப்படலாம்.
எனவே, வங்கி கணக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தால் உடனடியாக அதை ரீ ஆக்டிவேட் செய்யவும். வங்கி கிளைக்கு நேரடியாக சென்றோ அல்லது ஆன்லைனிலோ இதை செய்யலாம்.