ரயிலில் RACயில் ட்ராவல் செய்றீங்களா? அப்போ அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க..
RACயில் பயணிப்பது தொடர்பான முக்கிய தகவலை தெரிந்துக்கொள்வோம்.
RAC
RAC (Reservation Against Cancellation) என்பது ரத்து செய்யப்பட்ட முன்பதிவுக்கு எதிரான ஒதுக்கீடு ஆகும். யாராவது தங்கள் முன்பதிவை ரத்து செய்தால், உங்கள் RAC இருக்கை உறுதி செய்யப்படும்.
இது தொடர்பான இரயில்வேயின் முக்கியமான விதிமுறை ஒன்று உள்ளது. இதுகுறித்து இரயில்வேயின் தகவல் மற்றும் விளம்பரத் துறை நிர்வாக இயக்குனர் திலீப் குமார் கூறுகையில், ''RAC இருக்கை இரண்டு பயணிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
முக்கிய தகவல்
பகல் நேரத்தில் இருவரும் அமர்ந்து பயணிக்கலாம். இரவு நேரத்தில் இருவரும் தங்கள் கால்களை நீட்டி உறங்கலாம். ஆனால், பக்கவாட்டு மேல் இருக்கையில் உள்ள பயணி பகலில் கீழ் இருக்கையில் வந்து அமரலாம். ஆனால், இரவு உறங்கும் நேரம் வந்ததும், அவர் தனது மேல் இருக்கைக்குச் செல்ல வேண்டும்.
இரயில்வே விதிமுறைகளின்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை உறங்கும் நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில், அவர் தனது மேல் இருக்கையில் தான் அமரவோ அல்லது உறங்கவோ வேண்டும்.
இந்த நேரத்தில், அவர் கீழ் இருக்கையில் அமர வற்புறுத்தினால், நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) புகார் அளிக்கலாம். டிக்கெட் பரிசோதகர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துவார்.'' எனத் தெரிவித்துள்ளார்.